Saturday, June 19, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

இது வரை எதையும் சாதிக்கவில்லைஎன்றாலும்
எங்களது எண்ணிக்கை நூறு கோடி !

இதோ இன்னும் விரட்டி கொண்டிருக்கிறோம் ,இருபது ஆண்டுகள்முன்னோக்கி போய்விட்ட நவீனத்தை !

இப்போதே சேர்த்து வைத்திருக்கிறோம் "கடன் தொகையை"
எங்கள் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்து !

ஊழல் செய்வதிலும் ஒழுக்க நெறிமுறைகள் உண்டிங்கு !
இது போன்ற இறையாண்மை இருப்பதெங்கு!

பட்டைய படிப்பிற்கு லஞ்சம் கொடுப்பது பழைய பண்பாடு !
லஞ்சதிற்கே பட்டைய படிப்பு வகுத்தது எங்கள் பாரத பண்பாடு !

விடுமுறை மட்டும் இல்லையென்றால் வேதனையில்
வீழ்ந்திருக்கும் ஆகஸ்ட்டு பதினைந்து !

காந்தி நோட்டு மட்டும் இல்லையென்றால்
புறக்கணிக்க பட்டிருக்கும் பொது தேர்தல் !

அவலங்கள் இது போன்று ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தலைமுறையும் படித்துகொண்டிருக்கும்


"பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு"


Saturday, May 29, 2010

tamilish க்கு நன்றி

tamilish க்கு நன்றி!!!!



காள ஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்த நிகழ்வு குறித்து , மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களால் ஒரு சாரரின் மத நம்பிக்கைகளையும் , மத உணர்வுகளையும் கொச்சை படுத்தும் வகையில் பதிவிட பட்டிருந்த ஒரு இடுகையை  நீக்கியமைக்கு tamilish   ஐ பாராட்டுகிறேன் 
அனைத்து மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் tamilish  இன் நேர்மையான பணி தொடரட்டும்

Tamilish